Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா எப்போது? தேவஸ்தானம் தகவல்..!

Mahendran
புதன், 26 மார்ச் 2025 (10:12 IST)
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா சிறப்பாக நடத்தப்படும். இந்த வருடத்திற்கான விழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். ஏப்ரல் 2-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடியேற்றி விழாவை தொடங்குகிறார் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
 
மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா ஏப்ரல் 11-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த நாட்களில் தினசரி வழக்கமான பூஜைகள் மற்றும் உத்சவ பலி ஆகியவை சிறப்பாக நடத்தப்படும். ஏப்ரல் 10-ஆம் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளிவேட்டை நிகழ்வு நடைபெறும்.
 
விழாவின் கடைசி நாளான ஏப்ரல் 11-ஆம் தேதி காலை 11 மணிக்கு பம்பை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு நிகழ்வு நடக்கிறது. இதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும்.
 
மேலும், சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 18-ஆம் தேதி வரை கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். விஷு பண்டிகை ஏப்ரல் 14-ஆம் தேதி கொண்டாடப்படும். இவ்வாறு சபரிமலை ஐயப்பன் கோவில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமை இருந்தால் தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் விதிமுறைகளை மாற்றும் டிரம்ப்..!

பாம்பன் புதிய ரயில் பாலம்: திறந்து வைக்க வருகிறார் பிரதமர் மோடி! ஏற்பாடுகள் தீவிரம்!

சென்னையில் தொடர் நகைப்பறிப்பில் ஈடுபட்டவர் என்கவுண்டரில் சுட்டு கொலை: பரபரப்பு தகவல்..!

டெல்லியில் அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்பு.. உறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி..!

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments