கஞ்சா செடி வளர்க்க இமாச்சல பிரதேச மாநிலம் அனுமதி அளித்துள்ள நிலையில் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
கஞ்சா செடி வளர்க்கவோ அல்லது கஞ்சாவை பயன்படுத்தினாலோ சட்ட விரோதமான குற்றம் என்பதால் அவ்வாறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இமாச்சல பிரதேச மாநில அரசு கஞ்சா செடியை வளர்க்க அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் தொழில் மற்றும் அறிவியல் மருத்துவ ஆராய்ச்சிகள் மட்டுமே கஞ்சாவை வளர்க்க இமாச்சலப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நேற்று தர்மசாலாவில் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கஞ்சா செடியின் மூலம் அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே கஞ்சா செடியை வளர்க்க அனுமதி என்றும் பொதுமக்களுக்கு இந்த அனுமதி பொருந்தாது என்றும் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு நல்ல நோக்கத்திற்காக கஞ்சா செடியை பயன்படுத்துவதை அனுமதிக்கலாம் என்ற நோக்கத்தில் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.