Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக் டாக் தடையை நீக்க முடியாது – உச்சநீதிமன்றம் அதிரடி !

Webdunia
திங்கள், 15 ஏப்ரல் 2019 (14:27 IST)
டிக் டாக் தடை குறித்து கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், முத்துக்குமார் என்பவர் தாக்கல்செய்த மனுவில் டிக்டாக் மற்றும் மியூசிக்கலி போன்ற செயலிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது போன்ற செயலிகளை தடை செய்வது குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யவேண்டுமென உத்தரவிட்டார்.

இதையடுத்து உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டுமென டிக் டாக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுவில் ‘ டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பது கருத்து சுதந்திரத்துக்கு பாதிப்பு ஏற்படும். விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு வீடியோக்களை வெளியிடுகிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மனுக்குறித்த விசாரணையின் போது ’ டிக்டாக்கின் மூலம் ஆபாசமான வீடியோக்கள் அதிகளவில் வெளியாகின்றன. அதனால் மதுரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடை விதிக்கமுடியாது’ எனத் தெரிவித்துள்ளனர்.

உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு நடக்க இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments