Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’’டிக் டாக் ’’ தடைக்கு ஆதரவளித்த இளைஞர்கள்

Advertiesment
Young
, புதன், 10 ஏப்ரல் 2019 (14:55 IST)
தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளதோ அதே அளவுக்கு பல தீமையான விஷயங்களும்  நடந்தேறி வருகின்றன. சமீபத்தில் டிக்டாக் செயலியால் இளைஞர்கள் எல்லை மீறி நடந்து வருவதாக பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து டிக்டாக் செயலியை ஏன் தடை செய்யக்கூடாது என்று மத்திய அரசுக்குக் கடந்த வாரம்  சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதற்கு மக்கள் தொகையில் 10 சதவீத இளைஞர்கள் ஆதவளித்துள்ளதாக ஆய்வில் வெளியான தகவல் தெரிவிக்கின்றன.
 
மேலும் இந்த டிக்டாக் செயலி உலகம் முழுதும் பில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இதில் 50 மில்லியன் வாடிக்கையாளகள் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக உள்ளதாகவும் தெரிகிறது. 
 
ஆக்கப்பூர்வமான விஷயங்களை ஆதரிப்பதில் நம் இந்திய  இளைஞர்கள் முனைப்போடு உள்ளது பாராட்டுக்குரியது என்றே பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுக்கடுக்கான கேள்விகள்: தலைதெறிக்க ஓடிய செல்லூர் ராஜூ