Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

Bridge Collapse

Prasanth Karthick

, ஞாயிறு, 30 ஜூன் 2024 (16:29 IST)
சமீபமாக பீகார் மாநிலத்தின் பல பகுதிகளில் பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில் தற்போது ஜார்கண்ட் மாநிலத்திலும் பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.



வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் பாலங்கள் ஆங்காங்கே இடிந்து விழும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 11 நாட்களில் பீகாரில் மட்டும் 5 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது.இவை அனைத்துமே புதிதாக கட்டப்பட்ட பாலங்கள் என்பதால் பாலம் கட்டுவதில் நடைபெற்ற ஊழல் காரணமாகவே பாலங்கள் இடிந்து விழுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் இன்று பீகாரின் அண்டை மாநிலமான ஜார்கண்டிலும் பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் கிரிதிக் மாவட்டத்தில் ஆர்கா நதியின் இடையே பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. ரூ.5.5 கோடி பொருட்செலவில் கட்டபட்டு வந்த இந்த பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் உயிர்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் ஆர்காவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாகவே பாலம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

புதிதாக கட்டப்படும் பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழும் சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!