வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. நேற்று சென்னையில் நல்ல கனமழை பெய்ததை அடுத்து சாலைகளில் வெள்ளம் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது மீண்டும் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாகை கடலூர் புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும் காரைக்கால் துறைமுகத்திலும் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
மேலும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரிசா அருகே நிலை கொண்டிருப்பதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
மேற்குவங்க மாநிலம் மற்றும் வங்கதேசம் இடையே இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று கூறப்படுவதால் மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது
மேலும் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க இருப்பதை அடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது