Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரவு 7 மணிக்கு கஸ்டமருக்கு கால் செய்த HDFC வங்கி! - அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!

இரவு 7 மணிக்கு கஸ்டமருக்கு கால் செய்த HDFC வங்கி! - அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!

Prasanth Karthick

, புதன், 11 செப்டம்பர் 2024 (12:27 IST)

வங்கிகளுக்கான நெறிமுறைகளை முறையாக பின்பற்றாத குற்றத்திற்காக பிரபலமான Axis, HDFC வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.

 

 

இந்தியாவில் 2022ம் ஆண்டு கணக்கீட்டின்படி மொத்தம் 12 தேசியமயமாக்கப்பட்ட அரசு வங்கிகளும், 21 தனியார் வங்கிகளும் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிகளில் கணக்கு தொடங்குவது, சேமிப்பு கணக்கு, நிறுவன கணக்கு பொறுத்து பல்வேறு பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

 

இந்நிலையில் வங்கிகளுக்கான நெறிமுறைகளை முறையாக பின்பற்றாத வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்து வருகிறது. அந்த வகையில் தற்போது பிரபலமான தனியார் வங்கிகளான ஆக்ஸிஸ் வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 

 

தனியார் நிறுவனங்கள் வங்கிகளில் சேமிப்புக் கணக்கு தொடங்கும் முன்னர் அவை உரிய தகுதி பெற்றவையா என சோதிக்காமல் சில நிறுவனங்கள் சேமிப்பு கணக்கு திறக்க அனுமதித்ததற்காக ஆக்சிஸ் வங்கிக்கு ரூ.1.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

அதுபோல இரவு 7 மணிக்கு மேல் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு பேசியதற்காக ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு ரூ.1 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ்.பி அலுவலகத்தில் விசாரணைக்கு மூன்றாவது நாளாக ஆஜரான ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா!