Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! இடைஞ்சலாக இருந்த கணவன்! - மனைவி செய்த கொடூரம்!

Prasanth K
திங்கள், 21 ஜூலை 2025 (09:39 IST)

மகாராஷ்டிராவில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க இடையூறாக இருந்த கணவனை, மனைவி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள கோரேகாவ் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு சில ஆண்டுகள் முன்னதாக ரஞ்சனா என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில் இருவரும் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளனர். ரஞ்சனாவுக்கு சில மாதங்கள் முன்னதாக ஷாருக் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

 

ரஞ்சனா தனது கணவர் வெளியூர் செல்லும் சமயமாக பார்த்து ஷாருக்கை வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். ஒருமுறை இருவரும் உல்லாசமாக இருந்தபோது கையும், களவுமாக சந்திரசேகரிடம் சிக்கியுள்ளனர். இதில் கணவன் மனைவி இடையே பெரும் சண்டை எழுந்த நிலையில், தனது கள்ளக்காதலை கைவிடுவதாக ரஞ்சனா கூறியுள்ளார். ஆனால் ஷாருக்கை மறக்க முடியாத ரஞ்சனா ரகசியமாக ஷாருக்கை சந்திக்கத் தொடங்கியுள்ளார். இது சந்திரசேகருக்கு தெரிய வர அடிக்கடி மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

சந்திரசேகர் இருக்கும் வரை தன்னால் ஷாருக்குடன் உல்லாசமாக இருக்க முடியாது என்பதை உணர்ந்த ரஞ்சனா, தனது கள்ளக்காதலன் ஷாருக் மற்றும் அவரது நண்பன் மைனுதீன் உள்ளிட்டவர்களோடு சேர்ந்து தனது கணவனை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி சம்பவத்தன்று ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த சந்திரசேகரை ஷாருக்கும், மைனுதீனும் சேர்ந்து கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளனர்.

 

பின்னர் பிணத்தை தூக்கி ஆரே காலனி பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். சந்திரசேகரின் உடலை கைப்பற்றி போலீஸார் விசாரித்ததில் அவர் கழுத்து நெறிபட்டு இறந்தது தெரிய வந்துள்ளது. மேலும் கணவர் இறந்தது பற்றி ரஞ்சனா அவ்வளவாக சோகத்தில் இல்லாததும் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்த, அவர்கள் அழுத்தி விசாரித்ததில் ரஞ்சனா நடந்தவற்றை ஒப்புக் கொண்டுள்ளார். அதன்படி கொலை வழக்குப்பதிவு செய்த போலீஸார் ரஞ்சனாவையும், மைனுதீனையும் கைது செய்த நிலையில், கள்ளக்காதலன் ஷாருக் தலைமறைவாகியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்க என்ன ரோடு ஷோ நடத்துறீங்க! உதயநிதிக்கு நடக்கப்போகும் ரோடு ஷோவை பாருங்க! - ராஜ் கவுண்டர் சூளுரை!

தமிழகத்தில் இந்த ஆண்டு 50 எம்பிபிஎஸ் இடங்கள் குறைகிறதா? மாணவர்கள் அதிர்ச்சி..!

அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு..! திமுகவில் இணைகிறாரா?

மகனே திரும்பி வா..! கதறி அழுத அரசர்! சவுதி அரேபியாவின் ‘Sleeping Prince’ காலமானார்!

கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! இடைஞ்சலாக இருந்த கணவன்! - மனைவி செய்த கொடூரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments