Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 28 April 2025
webdunia

மாமியாரை அடித்த மருமகள்: ஆக்‌ஷன் எடுத்த முதல்வர் – வைரலான வீடியோ

Advertiesment
National News
, சனி, 8 ஜூன் 2019 (14:27 IST)
ஹரியானா மாநிலத்தில் மாமியாரை மருமகள் கொடூரமாக அடித்து துன்புறுத்திய வீடியோவை பார்த்து அந்த பெண்ணை கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறார் அம்மாநிலத்தின் முதலமைச்சர்.

ஹரியானாவின் மஹேந்திரகர் பகுதியை சேர்ந்தவர் காந்தா தேவி. இவரது மாமியார் சாந்த் பாய். வயது முதிர்ந்த சாந்த் பாய் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். அடிக்கடி அவரை திட்டியும், அடித்தும் வந்திருக்கிறார் மருமகள் காந்தா தேவி. இத்தனைக்கும் சாந்த் பாயின் கணவர் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து உயிரிழந்தவர் என்பதால் அவருக்கு ஓய்வூதியம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த ஓய்வூதிய தொகையை பிடுங்கி கொள்ளும் காந்தா தேவி மாமியாருக்கு சரியாக உணவளிக்காமல் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

நேற்று தனது மாமியாரை காந்தா தேவி அடித்து துன்புறுத்தியுள்ளார். இதை பார்த்து தாங்கமுடியாத பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் அதை வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார்.

அதனை பார்த்த ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் உடனடியாக அந்த பெண்ணை கைது செய்யுமாறும், அந்த மூதாட்டிக்கு தேவையான உதவிகள் செய்யுமாறும் கட்டளையிட்டார்.

பிறகு இதுபற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்த அவர் “வளர்ச்சியடைந்த சமூகத்தில் இதுபோன்ற மனிதாபிமானமற்ற சம்பவங்களை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. அந்த மூதாட்டியை துன்புறுத்திய பெண் கைது செய்யப்பட்டார்” என தெரிவித்துள்ளார்.

இந்த ஹரியானா முதல்வர் மனோகர் லால்தான் சில நாட்கள் முன்பு நடிகர் சிவக்குமார் ஸ்டைலில் செல்போனை தட்டிவிட்டு வைரல் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’முதலிரவுக்கு முன் புதுமாப்பிள்ளை தற்கொலை’ : திடுக் சம்பவம்