கோதாவரியிலிருந்து காவேரி நீர் வரும் என்பதெல்லாம் கானல் நீர் தான் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பா.ஜ.க தலைமையிலான இரண்டாவது அரசு கடந்த மே 30-ஆம் தேதி பொறுப்பேற்று கொண்டது. இந்நிலையில் கடந்த மே 27-ஆம் தேதி கோதாவரி-காவிரி இணைப்பு திட்ட அறிக்கை விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பபட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோதாவரி-காவிரி இணைப்பால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தீரும் என தெரிவித்திருந்தார்.
இதனை குறித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கோதாவரியிலிருந்து காவிரிக்கு தண்ணீர் வருவதெல்லாம் கானல் நீராக போய்விடும் என்றும், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அவர் நீட் தேர்வால் 3 மாணவிகள் இறந்துள்ளது வருத்தத்தை அளிக்கிறது என்றும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருப்பதாக தெரியவந்துள்ளது.