Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குருவாயூர் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி: காணிக்கையாக என்ன கொடுத்தார் தெரியுமா?

குருவாயூர் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி: காணிக்கையாக என்ன கொடுத்தார் தெரியுமா?
, சனி, 8 ஜூன் 2019 (12:39 IST)
மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றுள்ளார். இன்று கேரளாவுக்கு சென்ற பிரதமர் குருவாயூர் கோவிலில் சென்று வழிபாடு செய்தார்.

இன்று முதல் தனது அரசு முறை வெளிநாட்டு பயணங்களை தொடங்கவிருக்கும் பிரதமர் மோடி முதலில் லட்ச தீவுக்கு செல்ல இருக்கிறார். இன்று அங்கு முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு முடிந்ததும் நேரே பயணித்து இலங்கை செல்கிறார். இலங்கை வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு முதன்முறையாக இலங்கைக்கு செல்லும் வேற்று நாட்டு பிரதமர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பயணங்களை தொடங்கும் முன்னர் இன்று கேராளாவில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு துலாபாரம் கொடுத்தார். தனது எடைக்கு நிகரான தாமரை மலர்களை துலாபாரமாக கொடுத்தார் பிரதமர் மோடி. இதற்காக 112 கிலோ எடைக்கு தாமரை மலர்கள் கொண்டுவரப்பட்டன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம்