Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எந்தெந்த பொருட்களுக்கு வரியே இல்லை.. ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்த நிர்மலா சீதாராமன்..!

Advertiesment
ஜி.எஸ்.டி. கவுன்சில்

Siva

, வியாழன், 4 செப்டம்பர் 2025 (08:09 IST)
ஜிஎஸ்டி கவுன்சிலின் புதிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறைகளுக்குப் பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த சீர்திருத்தங்களுக்கும் அமெரிக்காவின் வரிவிதிப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
 
பொதுமக்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு வரிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. தினசரி மக்கள் பயன்படுத்தும் ஷாம்பு, சோப்பு உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
 
தனிநபர் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டிற்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காப்பீட்டு சேவைகள் சாமானிய மக்களுக்குக் கிடைக்க செய்யப்பட்டுள்ளது.
 
கல்வி சார்ந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
மின்சாதனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 28% ஜிஎஸ்டி வரி 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
 
விவசாயம் மற்றும் மருத்துவத் துறைக்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாய பொருட்களுக்கான 18% மற்றும் 12% ஜிஎஸ்டி வரிகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
 
உயிர்காக்கும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான வரிவிதிப்பு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
 
இந்தச் சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடையும் என்றும், அனைத்துத் தரப்பு மக்களும் இதன் பலனை அனுபவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜிஎஸ்டி சீர்திருத்தம் வரவேற்கத்தக்கது; ப. சிதம்பரம் X தளத்தில் பதிவு