ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள இரண்டாவது தளத்திலிருந்து இன்று காலை 10.42 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12 ராக்கெட் விண்ணில் பாய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்விஎஸ் 01 என்ற வழிகாட்டு செயற்கை கோள்களை இந்த ராக்கெட் சுமந்து செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தரை, கடல் வான்வழி போக்குவரத்தை கண்காணிப்பதற்காக என்விஎஸ் 01 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளை சுமந்தபடி செல்லும் இஸ்ரோவின் ஜிஎஸ்எல்விஎஃப் 12 என்ற ராக்கெட் வெற்றிகரமாக செல்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று திருப்பதியில் வழிபாடு நடத்தினர்.
இந்த ராக்கெட் செலுத்துவதற்கான கவுண்ட் டவுன் நேற்று தொடங்கியது என்பதும் இன்று காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மூன்று நிலைகள் கொண்ட இந்த ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையிலிருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்காணித்து வருகிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.