Publish Date: Wed, 26 Apr 2023 (15:05 IST)
Updated Date: Wed, 26 Apr 2023 (15:07 IST)
நிலவுக்கு அனுப்பப்பட்ட ஜப்பானின் ராக்கெட் நொறுங்கி விழுந்ததாக டோக்கியோவில் உள்ள அறிவியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது
லூனர் லேண்டர் என்ற ராக்கெட் நிலவுக்கு அனுப்பப்பட்ட நிலையில் அந்த ராக்கெட் நிலவில் இறங்க முயற்சி செய்தபோது நொறுங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலவில் முதல் முறையாக ஆளில்லா ராக்கெட் ஜப்பான் அனுப்பிய நிலையில் அந்த ராக்கெட் நிலவில் கடினமான தரையில் இறங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்ட போது திடீரென காணாமல் போனதாகவும் அதனை அடுத்து இந்த திட்டம் தோல்வி அடைந்ததாகவும் ஜப்பான் அறிவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் எதிர்காலத்தில் நிலவுக்கு ராக்கெட்டை அனுப்பும் இரண்டு திட்டம் தங்களிடம் இருப்பதாகவும் நிச்சயம் ஒருநாள் நிலவில் தங்கள் நாட்டின் ராக்கெட் நிலவில் தரையில் இருக்கும் என்றும் ஜப்பான் நாட்டின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
Mahendran
Publish Date: Wed, 26 Apr 2023 (15:05 IST)
Updated Date: Wed, 26 Apr 2023 (15:07 IST)