Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூமியை விட்டு தூரமாக செல்லும் நிலா? பூமிக்கு ஆபத்து? – அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

Moon earth
, திங்கள், 27 பிப்ரவரி 2023 (09:07 IST)
பூமியின் துணைக்கோளான நிலவு மெல்ல பூமியை விட்டு நகர்ந்து செல்வதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூரிய குடும்பத்தில் சூரியனை மையமாக கொண்டு பூமி சுற்றி வருவது போல, பூமியை சுற்றி வரும் துணைக்கோள் நிலவு. பூமியை போல வியாழன், சனி உள்ளிட்ட கிரகங்களுக்கும் பல துணை நிலவுகள் உள்ளன. இவை ஒரு குறிப்பிட்ட சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. பூமியை பொறுத்த வரை பூமியில் நிலவும் வெப்பநிலை, தட்பவெப்ப காரணிகளுக்கு நிலவின் இன்றியமையாத பங்களிப்பு உள்ளது. பூமியை நிலவு ஒரு குறிப்பிட்ட தொலைவை மையமாக கொண்டு சுற்றிவருவது மிலன்கோவிச் அச்சு சுழற்சி என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த மிலன்கோவிச் சுழற்சி பாதை நாளுக்கு நாள் நீண்டு கொண்டு செல்வதை சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது நிலவு பூமியிலிருந்து நாளுக்கு நாள் தூரமாக சென்றுக் கொண்டிருப்பதை நாசா விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். ஆண்டுக்கு 3.8 செமீ என்ற அளவிற்கு நிலவு பூமியை விட்டு விலகி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விலகல் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. விஞ்ஞானிகள் கணிப்பின்படி 2.46 பில்லியன் ஆண்டுகளில் 60 ஆயிரம் கி.மீ தொலைவு நிலவு விலகியுள்ளதாம்.

நிலவின் சுழற்சியால்தான் பூமியில் கடல் அலைகள் உண்டாவது, வெப்பநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு இயற்கை காரணிகள் நிகழ்கின்றன. நிலவு இவ்வாறு மெல்ல தொலைவாக சென்று கொண்டிருப்பது இயற்கை மற்றும் வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவை பந்தாடிய பனிப்புயல்; இருளில் மூழ்கிய மக்கள்!