மியான்மரில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளை ராணுவ கர்னல் மற்றும் உட்பட 8 ராணுவ வீரர்கள் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவுகாத்தி ஐஸ்வால் காவல் நிலையத்தில் ஒருவர் சமீபத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.
அதில் 2014ஆம் ஆண்டு கடைசியில், மியான்மரில் இருந்து மிசோரம் மாநிலத்திற்கு ரூ.14.5 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளை தான் கடத்தி வந்தபோது, துப்பாக்கி முனையில் அங்கு வந்த எட்டு ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ கர்னல் ஆகியோர் அந்த தங்க கட்டிகளை கொள்ளையடித்து சென்று விட்டதாக புகார் அளித்தார்.
மேலும், அதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளிக்கக்கூடாது என்று தன்னை எச்சரித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
இதுபற்றி விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக் குழுவினர், இந்த செயலில் ஈடுபட்ட அசாமின் 39 அசாம் ஆயுதப்படை பிரிவின் கர்னல் ஜஸ்திங் சிங் தலைமையிலான குழுவினரை விசாரணை நடத்தினர்.
அதில், ராணுவ வீரர்கள் தங்கத்தை கொள்ளையடித்தது, அதை பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து கர்னல் ஜஸ்திங் சிங் இடை நீக்கம் செய்யப்பட்டார். மற்ற 8 ராணுவ வீரர்களும் கைது செய்யப்பட்டனர்.