Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐஐஎம் மையத்தில் சண்டை போட்ட 2 ராட்சத பல்லிகள் !

Advertiesment
kolkatta iit
, வியாழன், 2 மார்ச் 2023 (22:30 IST)
கொல்கத்தா ஐஐஎம் மையத்தின் இரண்டு பெரிய பல்லிகள் சண்டை போட்ட வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

மேற்கு வங்கம் மா நிலத் தலை நகர் கொல்கத்தாவில் ஐஐஎம் ( இந்திய மேலாண்மை மையம்) என்ற உயர்கல்வி மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த வளாகத்தில் நீர் நிலைகள் அமைந்துள்ள  நிலையில், இன்று, இப்பகுதியில் இரண்டுபெரிய உடும்பு வகையைச் சேர்ந்த பல்லிகள் இரண்டு சண்டை போட்டுக்கொண்டன.

பொதுவாக விலங்குகள் தங்கள் எல்லைப் பகுதிகளுக்காக மோதிக் கொள்ளும், அதன்படி, இன்று இப்பல்லிகள் இரண்டும் மோதிக் கொண்டன. இது பெண் பல்லியைக் கவரும் நோக்கில் ஆண் பல்லிகள் இப்படி மோதிக்கொள்ளும் எனக் கூறப்படுகிறது.

இந்த  நிலையில், ஐஐஎம் மையத்தின் வளாகத்தின் இரண்டு பல்லிகள் சண்டையிடும் காட்சிகள் பற்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேற்கு வங்கம் மாநிலத்தில் சுவாசத் தொற்று பாதிப்பால் 7 குழந்தைகள் பலி