Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அப்பா.. உங்கள் கனவை நிறைவேற்றுவேன்.. ராஜீவ் காந்தி பிறந்த நாளில் ராகுல் காந்தி உருக்கம்..!

Advertiesment
ராகுல் காந்தி

Mahendran

, புதன், 20 ஆகஸ்ட் 2025 (11:12 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவரது மகன் ராகுல் காந்தி ஒரு உணர்ச்சிகரமான பதிவை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். 
 
ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், "ஒவ்வொரு குடிமகனும் மதிக்கப்பட்டு, நல்லிணக்கம் இருக்கும்போது, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு வலுவாக நிற்கும் ஒரு இந்தியா தான் உங்கள் கனவு. தந்தையே, அந்த கனவை நிறைவேற்றுவதே என் வாழ்க்கையின் குறிக்கோள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த நிகழ்வு டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் பிரியங்கா காந்தி மற்றும் ப. சிதம்பரம் உட்படப் பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பிகாரில் தேர்தல் பேரணியில் இருந்ததால் ராகுல் காந்தியால் இந்த நிகழ்வில் நேரடியாக கலந்துகொள்ள முடியவில்லை.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தவெக பேனர் வைத்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலி! - ஸ்ரீவில்லிபுத்தூரில் சோகம்!