Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் 10ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (12:57 IST)
நாளை முதல் ஜூன் 10ஆம் தேதி வரை கேரளாவில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
அரபி கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியிருக்கும் நிலையில் அது புயலாக மாற அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சற்று தெரிவித்திருந்தது என்பதை சற்றுமுன் பார்த்தோம். 
 
இந்த நிலையில் கேரளாவில் நாளை முதல் பத்தாம் தேதி வரை நான்கு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதேபோல் தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை காலம் முடிவடையும் நிலையில் இனி தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments