தென் கிழக்கு அரபிக்கடலில் திடீரென குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியிருப்பதாகவும் இதனை அடுத்து அது புயலாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை காலம் முடிவடைந்து தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறக்கூடும் என்று கூறப்படுகிறது. எனவே கேரளாவில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்திலும் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.