Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளமை திரும்புதே..! 60 வயது நபரை 25 வயது நபராக ஆக்க முடியும் என மோசடி! - தம்பதிக்கு வலைவிரித்த போலீஸ்!

Prasanth Karthick
வெள்ளி, 4 அக்டோபர் 2024 (11:14 IST)

உத்தர பிரதேசத்தில் முதுமையை போக்கி இளமையாக்குவதாக கூறி 35 கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதியை போலீஸார் தேடி வருகின்றனர்.

 

 

முதுமை என்பது பலருக்கும் அச்சமளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது. பலரும் முதுமையை மறைத்து இளமையாக தங்களை காட்டிக் கொள்ள விரும்பும் நிலையில் அதை பயன்படுத்தி பல அழகு சாதன பொருட்கள் அமோக விற்பனையாகின்றன. இதில் பல மோசடிகளும் நடக்கின்றன.

 

அப்படியான ஒரு சம்பவம்தான் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. கான்பூரை சேர்ந்த ராஜீவ் துபே, அவரது மனைவி ராஷ்மி துபே இருவரும் முதுமையை போக்கி இளமையை போக்கும் சிகிச்சை அளிப்பதாக விளம்பரம் செய்து பல கோடி பணத்தை மோசடி செய்துள்ளனர்.
 

ALSO READ: தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!
 

இளமையை திரும்ப செய்ய இஸ்ரேலில் இருந்து டைம் மெசின் வரவழைத்துள்ளதாகவும், அதன்மூலம் 60 வயது நபரை 25 வயது நபராக மாற்ற முடியும் என்றும் பலரை நம்ப வைத்துள்ளனர். இளமை சிகிச்சைக்கு ரூ.90 ஆயிரம் வரை வசூலித்துள்ளனர்.

 

சுமார் ரூ.35 கோடி வரை ஏமாற்றிய தம்பதி மீது பலரும் புகார் அளித்துள்ள நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் மோசடி தம்பதியை வலைவிரித்து தேடி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

< > Kanpur couple, Fraudulent treatment, Uttar Pradesh, கான்பூர் தம்பதி, இளமையாக்கும் மோசடி, உத்தர பிரதேசம், < >

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments