காங்கிரஸ் தொண்டர்கள் 10 பேர் இருந்தால் போதும் ஒரே இரவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை அடித்து நொறுக்கி விடலாம் என கேரள காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பினராயி என்ற பகுதியில் புதிதாக கட்டப்பட்ட காங்கிரஸ் அலுவலகத்தை மர்ம நபர்கள் சூறையாடிய நிலையில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் தான் காரணம் என்றும் அவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் கேரளா காங்கிரஸ் தலைவர் சுதாகரன், இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் கட்சியினை தயாராக இருக்க வேண்டும் என்றும், 10 காங்கிரஸ் தொண்டர்கள் இருந்தால் போதும் ஒரே இரவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடி விட முடியும் என்றும் கூறியுள்ளார்.
அவரது பேச்சு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.