Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இம்ரான்கான் நோபல் பரிசுக்கு தகுதியானவர்: சர்ச்சை கருத்து கூறிய முன்னாள் நீதிபதி

இம்ரான்கான் நோபல் பரிசுக்கு தகுதியானவர்: சர்ச்சை கருத்து கூறிய முன்னாள் நீதிபதி
, புதன், 6 மார்ச் 2019 (07:03 IST)
பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட அபிநந்தனை விடுவிக்காவிட்டால் போரை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை உணர்ந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்தியா மற்றும் உலக நாடுகள் கொடுத்த அழுத்தம் காரணமாக அபிநந்தனை விடுதலை செய்தார். ஆனால் பாகிஸ்தானியர்களும், இந்தியாவில் உள்ள சில அரைவேக்காடு நபர்களும் இம்ரான்கானுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று புகழ்ந்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வரும் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி  மார்கண்டேய கட்ஜூ, பாகிஸ்தான் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, 'இந்தியா, பாகிஸ்தான் இடையே உச்சகட்ட பதற்றம் ஏற்பட்ட போது, இம்ரான்கானின் பேச்சு சமநிலையாக இருந்ததாகவும், மிகவும் தெளிந்தவராக போர் ஒரு தீர்வாக இருக்காது என்று தீர்க்கமாக கூறியதாகவும், இதனால் அவர் நோபல் பரிசுக்கு மிகவும் தகுதியானவர் என்றும் தெரிவித்தார். 
 
webdunia
மார்க்கண்டேய கட்ஜூவின் இந்தப் பேச்சுக்கு இந்தியாவில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. சமூக வலைத்தள பயனாளிகள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஏற்கனவே இந்திய பிரதமர் மோடி குறித்து இவர் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தி.மு.க - காங்கிரஸை வீழ்த்துவதுதான் அ.தி.மு.க., கூட்டணியின் பிரச்சாரம் - மு.தம்பிதுரை