Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செய்திகளால் ’’மக்களின் சீரியல் மோகம்’’ குறைந்துள்ளது - ஊடகங்களை பாராட்டிய நீதிபதிகள்

செய்திகளால் ’’மக்களின் சீரியல் மோகம்’’ குறைந்துள்ளது - ஊடகங்களை பாராட்டிய நீதிபதிகள்
, செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (18:33 IST)
தொண்ணூறுகளில் தனியார் தொலைக்காட்சி பெருக பெருக மக்களின் கவனம் முழுக்க சீரியல் பக்கம் பெண்களின் பொழுதுபொக்காகவே  மாறியது. அது சமீபகாலம் வரை தொடர்ந்தது. இந்நிலையில் ஊடகங்களின் தாக்கத்தால் போட்டி போட்டுக்கொண்டு  மிக வேகமாக செய்திகளை வெளியிடுவதால் மக்களின் சீரியல் மோகம் குறைந்திருப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதுரையில் வசிக்கும் முகமது ரஸ்மி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தா. அதில் வாடிக்கையாளர்கள் பணம் கட்டிப் பார்க்கும் விரும்பிய சேனல்களில் பல விளம்பரங்கள் ஒளிபரப்புகின்றனர். இது வாடிக்கையாளர்களுக்கு இடையூறாக உள்ளதோடு டிராய் விதிமுறைக்கு எதிராகவும் உள்ளது. என்று தெரிவித்திருந்தார். 
 
இம்மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் இந்தியாவில் மொத்தம் 874 சேனல்கள் உள்ளன, இதில் 125 சேனல்கள் விதிகளை மீறியுள்ளதாக டிராயே அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த சேனல்கள் மீது விதிகளை மீறியதற்காக என்ன நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.
 
மேலும் அண்மைக்காலமாக செய்திச் சேனல்கள் எல்லாம் முக்கியச் செய்திகளை ஒளிபரப்புவதால் மின்னல் வேகத்தில் உடனுக்குடன் வழங்குவதால் மக்களின் கவனம் சீரியல்களிலிருந்து செய்திகளின் பக்கம் திரும்பியுள்ளது என்று தெரிவித்தனர். 
 
மேலும் இந்த ஊடகங்களின் செய்திகளால் சீரியல்காளிலிருந்து மக்களை விலக்கி வைக்கிறது.அவர்களின் மனம் மாசாகமல் இருக்கவும் உதவுகிறது. என்று ஊடங்களின் செய்தி  கொடுப்பதவெகுவாகப்பாராட்டினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா அமைத்தது போல் வலுவான கூட்டணி அமைப்போம்: தம்பிதுரை