Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காஷ்மீர் வன்முறைக்கு ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படமே காரணம்: முன்னாள் முதல்வர்

Advertiesment
mufti
, செவ்வாய், 17 மே 2022 (08:43 IST)
காஷ்மீரில் தற்போது மீண்டும் வன்முறை வெடித்து வரும் நிலையில் இந்த வன்முறைக்கு ‘தி காஷ்மீர் பைல்ஸ்’  என்ற திரைப்படமே காரணமென முன்னாள் காஷ்மீர் முதல்வர் மெகபூபா  முப்தி தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘தி காஷ்மீர் பைல்ஸ்’  என்ற திரைப்படம் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தற்போது இந்த படம் ஓடிடியிலும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் வன்முறை ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ என்ற திரைப்படமே காரணம் என்றும் மக்களின் கவனத்தை திசை திருப்பவே பாஜக மதக்கலவரத்தை உருவாக்குகிறது என்றும் முன்னாள் காஷ்மீர் முதல்வர் முப்தி பேசியுள்ளார் அவரது இந்த பேச்சுக்கு பாஜகவினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நூல் விலை உயர்வை கண்டித்து 2வது நாளாக வேலைநிறுத்தம்: திருப்பூர் மக்கள் அதிருப்தி!