நூல் விலையை கண்டித்து இரண்டாவது நாளாக திருப்பூரில் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருவதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
நூல் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவில் உயர்ந்ததை அடுத்து திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்
நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த வேலைநிறுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வேலை இழந்து வேலை இல்லாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் இன்று 2-வது நாளாக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்
இதேபோல் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் தங்களது வருமானம் பெருமளவு பாதிக்கப்படும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்