Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீரம் நிறுவனத்தில் தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி!!

Advertiesment
சீரம் நிறுவனத்தில் தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி!!
, வெள்ளி, 22 ஜனவரி 2021 (08:03 IST)
சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

 
புனேவில் உள்ள கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டை தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் டெர்மினல் 1 நுழைவு வாயில் பகுதியில் நேற்று தீவிபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டன.
 
இந்நிலையில், சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 
 
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. ஆனால் வெல்டிங் செய்யும்போது ஏற்பட்ட தீப்பொறியால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு!