இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கான ஒரு டோஸ் ரூ.200-க்கு கிடைக்கும் என தகவல்.
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து சீரம் நிறுவனம் இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசிகளை தயாரித்துள்ளது. இந்நிலையில் சீரம் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ள நிலையில் 1 கோடி தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கான ஒரு டோஸ் ரூ.200-க்கு கிடைக்கும் எனவும் கோவிஷீல்டு மருந்துகளை அனுப்பும் பணி நாளை காலை முதல் தொடங்கும் எனவும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.