அரபிக்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது என்பதும் இந்த புயலுக்கு 'பிபோர்ஜாய்' என்று பெயர் வைக்கப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
மத்திய கிழக்கு அரபிக் கடலில் உருவான 'பிபோர்ஜாய்' என்ற புயல் தற்போது கோவாவுக்கு 820 கிலோமீட்டர் மேற்கில் மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த புயல் 48 மணி நேரத்தில் வலுப்பெற்று வடக்கு மற்றும் வடகிழக்கை நோக்கி நகர்ந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 'பிபோர்ஜாய்' புயல் காரணமாக தமிழ்நாடு கேரளா புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.