அரபிக் கடலையில் உருவான பிப்பர்ஜாய் புயல் கோவாவுக்கு மேற்கு மற்றும் தென்மேற்கில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றியது என்பதும் அதன் பின்னர் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக மாறியது என்பதையும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலையில் தற்போது பிப்பர்ஜாய் என்று அந்த புயலுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் அது மிக தீவிர புயலாக மாறி வலுப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் பிப்பர்ஜாய் புயல் கோவாவுக்கு 860 கிலோமீட்டர் மேற்கு மற்றும் தென்மேற்கு மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கேரளா உள்பட மேற்கு மாநிலங்களில் நல்ல மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.