பாகிஸ்தான் மீது துல்லியமாக தாக்குதல் நடத்த வேண்டும் என பஞ்சாப் மாநில கவர்னர் பன்மாரி லால் புரோஹித் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவுக்குள் பாகிஸ்தான் போதைப் பொருள்களை ட்ரோன்கள் மூலம் அனுப்பி வருகிறது என்றும் எனவே அதை தடுத்து நிறுத்த பாகிஸ்தான் மீது ஒன்று அல்லது இரண்டு துல்லிய தாக்குதல் என்றால் நடத்த வேண்டும் என்றும் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி அதிலிருக்கும் போதை பொருட்களை பாதுகாப்பு படையினர் அவ்வப்போது பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பன்வாரிலால் புரோஹித் அடுத்த தலைமுறையினர் போதைக்கு அடிமையாகாமல் இருப்பதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
போதை பொருளை தடுப்பதற்காக மத்திய அரசு எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்றும் குறிப்பாக பாகிஸ்தான் இந்தியாவிடம் வாலாட்டினால், அந்நாட்டுக்கு எதிராக துல்லியமான தாக்குதல்கள் நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.