Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் மேயராகும் முதல் சீக்கிய பெண்மணி!!

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2017 (14:46 IST)
அமெரிக்காவில் உள்ள யூபா நகரத்திற்கு இந்தியவைச் சேர்ந்த சீக்கிய பெண்மணி திரீத் டிட்பால் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டிட்பாலின் பெற்றோர் 1968-ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்துள்ளனர். டிப்டாலைத் தவிர அவரின் குடும்பத்தில் யாரும் படிக்கவில்லை.
டிட்பால், யூபா நகரில் 8 ஆண்டுகள் திட்டமிடல் ஆணைக்குழுவிலும் 2 ஆண்டுகள் உள்கட்டமைப்பு கமிஷனிலும் பணிபுரிந்துள்ளார். 2014 முதல் துணை மேயராக இருந்த டிட்பால் இப்பொழுது யூபா நகரத்திற்கு மேயராக தேர்ந்தெடுக்கப்படுள்ளார். டிசம்பர்-5 ஆம் தேதியன்று பதவியேற்க இருக்கும் டிட்பால் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மக்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைகளில் விழிப்புடன் இருக்கவும் திட்டமிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments