2025-ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம், செப்டம்பர் 21-ஆம் தேதி இரவு 9:59 மணிக்கு தொடங்கி, அதிகாலை 3:23 மணி வரை நிகழ உள்ளது. இது ஒரு பகுதி சூரிய கிரகணம் ஆகும். இந்த வானியல் நிகழ்வைக் கொண்டாடும் விதமாக, கூகுள் நிறுவனம் ஒரு சிறப்பு அனிமேஷனை உருவாக்கியுள்ளது.
கூகுள் பயனர்கள், "சூரிய கிரகணம்" அல்லது "Solar Eclipse" என தேடும்போது, ஒரு சிறப்பு அனிமேஷன் திரையில் தோன்றும். இந்த அனிமேஷனில், நிலவின் நிழல் சூரியனை மறைப்பதுபோன்று காண்பிக்கப்படும், இது சூரிய கிரகணம் எப்படி இருக்கும் என்பதை விளக்குகிறது.
அடுத்த சூரிய கிரகணம் 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி அன்றும், அதன்பின்னர் மார்ச் 3 அன்று ஒரு முழு சந்திர கிரகணமும் ஏற்படும் என வானவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.