Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறுத்தை குட்டி வாயில் செல்போனை திணித்த கொடுமை: இளைஞர்களை பிடித்து கொடுத்தால் 25000 பரிசு!

Advertiesment
National News
, திங்கள், 14 அக்டோபர் 2019 (14:24 IST)
சிறுத்தை குட்டியை பிடித்து துன்புறுத்திய இளைஞர்களை பிடித்து கொடுத்தால் 25000 ரூபாய் சன்மானம் வனத்துறை அறிவித்துள்ளது.

குஜராத்தின் ஜுனாகத் காட்டுப்பகுதியில் புகுந்த இளைஞர்கள் சிலர் அங்கு புதரில் பதுங்கியிருந்த சிறுத்தை குட்டி ஒன்றை பிடித்திருக்கிறார்கள். அதன் வாயில் செல்போனை கொடுத்து கடிக்க செய்வது போன்ற துன்புறுத்தல்களை செய்து அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள்.

சிறுத்தை குட்டியை அவர்கள் பிடித்த இடம் கிர் சோம்னாத் அல்லது ஜுனாகத் மாவட்டம் என கருதப்படுகிறது. அந்த வீடியோவில் காணப்படும் இளைஞர்களை பிடித்து கொடுத்தால் 25000 ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என குஜராத் வனத்துறை அறிவித்துள்ளது. அவர்கள் கொடுமைப்படுத்திய அந்த சிறுத்தைக்குட்டி என்ன ஆனது என்பது குறித்து தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து விலங்கியல் ஆர்வலர்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனாவை பிரிக்க நினைத்தால் அவ்வளவுதான்! யாரை எச்சரிக்கிறார் சின்பிங்?