Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாய் பாசம் தெரியும்… தெரியாமல் போவது தந்தை பாசமே! – தந்தையர் தினம்!

Fathers Day
, ஞாயிறு, 19 ஜூன் 2022 (11:01 IST)
இன்று உலகம் முழுவதும் தந்தையை போற்றும் விதமாக தந்தையர் தினம் கொண்டாடப்படும் நிலையில் அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.

உலகம் முழுவதும் மொழிகள் மாறினாலும், பண்பாடு, கலாச்சாரம் மாறினாலும் மாறாமல் தொடர்வது தாய், தந்தை மீது கொண்டிருக்கும், அவர்கள் நம் மேல் கொண்டிருக்கும் பாசம்தான். உலகம் முழுவதும் எழுத்து தொடங்கிய காலத்திலிருந்தே தாயை போற்றி பாடுவது, தாய் பாசத்தை சிறப்பிப்பது தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது.

சினிமாவில் கூட எம்.ஜி.ஆர் காலம் தொட்டு கேஜிஎஃப் வரை தாய் பாசத்தை மூலதனமாக கொண்டு கல்லாக்கட்டிய படங்கள் ஏராளம். ஆனால் தாய்க்கு நிகராக பாசத்தை வழங்கிய தந்தைக்கு இந்த முக்கியத்துவம் குறைவான அளவிலேயே அளிக்கப்பட்டுள்ளது.

இதை அமெரிக்காவில் 1966ல் அதிபராக இருந்த லிண்டன் பி ஜான்சன் எப்படியோ உணர்ந்திருக்கிறார். தாய்க்கு இணையாக குழந்தைகளுக்கு பாசம் மட்டுமல்லாமல் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் தந்தையையும் கொண்டாட வேண்டும் என விரும்பினார். இதனால் ஆண்டுதோறும் ஜூன் மாதம் வரும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை “தந்தையர் தினமாக” கொண்டாட அறிவிப்பு வெளியிட்டார். பின்னாளில் இது தேசிய விடுமுறை தினமாகவும் அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளும் ஜூன் 3ம் ஞாயிற்றுக்கிழமையை தந்தையர் தினமாக கொண்டாடி வருகின்றன. இந்த நாளில் குழந்தைகள் தங்கள் தந்தையருக்கு பரிசுகள் வாங்கி தருவது, சிறப்பு கவிதைகள், பாடல்கள் இயற்றுவது என தங்களது தந்தை பாசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்திய நிலப்பரப்பை பொறுத்தவரை பெரும்பான்மையான குழந்தைகளுக்கு (குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு) தங்கள் தந்தையர்கள் ஒரு கொடுங்கோலன் போலவே காட்சியளிக்கிறார்கள். இந்தியா போன்ற பொருளாதார சுமை நிறைந்த நாட்டில் பல தந்தையர்கள் பெரும் சிரமத்தின் பேரில் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பது, அவர்கள் தேவையை நிறைவேற்றுவது உள்ளிட்டவற்றை செய்கின்றனர். இந்த இயந்திரத்தனமான வாழ்க்கையால் அவர்களது குழந்தைகளுக்கு சரியாக நேரம் ஒதுக்க முடியாத சூழல், அதீத டென்ஷன் உள்ளிட்டவற்றால் சற்றே கடுமையாக நடந்து கொள்கின்றனர்.

இதுகுறித்து சமீபத்தில் வெளியான டான் உள்ளிட்ட சில திரைப்படங்கள் தந்தையின் பாசம் குறித்து பேசியிருந்தன. ஆதலால் குழந்தைகளே உங்கள் தந்தையின் சிடுசிடுப்புக்கு பின்னால் உள்ள பாசத்தை புரிந்து கொள்ளுங்கள். தந்தையர்களே கண்டிப்பை கொஞ்சம் பின் தள்ளி குழந்தைகளுக்கு கொஞ்சம் அன்பையும் கொடுங்கள். அனைவருக்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்னிபாத் விவகாரம்: முப்படை தளபதிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!