Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அக்னிபாத் விவகாரம்: முப்படை தளபதிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

Advertiesment
Rajnath
, ஞாயிறு, 19 ஜூன் 2022 (10:46 IST)
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது என்பதும் குறிப்பாக இளைஞர்கள் வன்முறையில் இறங்கி ரயில்களில் தீ வைத்து வருவதால் நாடு முழுவதும் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அக்னிபாத் என்ற திட்டத்திற்கு சென்னைஇலும் போராட்டம் நடந்து வந்தது என்பதும் காவல்துறையினர் இந்த போராட்டத்தை அடக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஏற்கனவே முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் ஆலோசனை செய்த நிலையில் இன்று மீண்டும் டெல்லியில் முப்படை தளபதிகளுடன் அவர் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் தீவிரமாக தொடர்ந்து போராட்டம் செய்து வருவதை அடுத்து இரண்டாவது கட்ட  ஆலோசனை  நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கையில் உணவு பஞ்சம்?? பள்ளி, அலுவலகங்கள் மூடல்!