Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபாஸ்டேக் ஆண்டு சந்தா அறிமுகம்.. ஒரு ஆண்டுக்கு எவ்வளவு? ஆண்டு சந்தா கட்டினாலும் சில நிபந்தனைகள்..!

Mahendran
புதன், 18 ஜூன் 2025 (15:15 IST)
சுங்கச்சாவடி கட்டணங்களுக்கான ஃபாஸ்டேக் முறையில், தற்போது ஆண்டு சந்தா திட்டம் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
2019 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபாஸ்டேக், சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், தாமதங்களை தவிர்த்து, டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்த உதவுகிறது. 
 
இந்த நிலையில்  ஃபாஸ்டேக் புதிய ஆண்டு சந்தா திட்டம், அதிக அளவில் சுங்கச்சாவடிகளை பயன்படுத்தும் நான்கு சக்கர சொந்த பயன்பாட்டு வாகனங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது, 60 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள சுங்கச்சாவடி கட்டண சிக்கல்களைத் தீர்க்கும்.
 
சந்தா விலை: ஃபாஸ்டேக் ஆண்டு சந்தாவின் விலை ₹3,000.
 
அமல் தேதி: இந்தத் திட்டம் ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வருகிறது.
 
செல்லுபடியாகும் காலம்: சந்தா செலுத்திய நாளிலிருந்து ஓராண்டு காலம் அல்லது முதல் 200 பயணங்கள், இவற்றில் எது முதலில் வருகிறதோ அதுவரை செல்லுபடியாகும். 200 பயணங்கள் முடிந்தால், மீண்டும் சந்தா செலுத்த வேண்டும்.
 
பெறும் முறை: ராஜ்மார்க் யாத்ரா செயலி, என்.ஹெச்.ஏ.ஐ (NHAI) மற்றும் எம்.ஓ.ஆர்.டி.எச் (MoRTH) வலைத்தளங்களில் இந்த ஆண்டு சந்தா பாஸ் பெறலாம்.
 
இத்திட்டம் தினசரி சுங்கச்சாவடிகளை கடக்கும் பயணிகளுக்கு வசதியான, பொருளாதார ரீதியாக பயனுள்ள மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments