தமிழகத்தில் இயங்கும் 78 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் 5% முதல் 10% வரை உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் 40 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமலாகிறது.
சென்னையில் பரனூர், வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ள புதிய கட்டணங்கள் குறித்த விவரங்கள் இதோ:
பரனூர் சுங்கச்சாவடி – புதிய கட்டணங்கள்
கார், ஜீப், வேன், இலகுரக மோட்டார் வாகனங்கள்
ஒருமுறை பயணம் – ரூ.75
ஒரே நாளில் இருபுறம் பயணம் – ரூ.110
இலகுரக வர்த்தக வாகனங்கள்
ஒருமுறை – ரூ.120
இருபுறம் – ரூ.180
பஸ்கள், டிரக்
ஒருமுறை – ரூ.255
இருபுறம் – ரூ.380
வர்த்தக வாகனங்கள்
ஒருமுறை – ரூ.275
இருபுறம் – ரூ.415
கனரக கட்டுமான எந்திர வாகனங்கள்
ஒருமுறை – ரூ.400
இருபுறம் – ரூ.595
பெரிய வாகனங்கள்
ஒருமுறை – ரூ.485
இருபுறம் – ரூ.725
வானகரம் சுங்கச்சாவடி – புதிய கட்டணங்கள்
கார், ஜீப், வேன், இலகுரக மோட்டார் வாகனங்கள்
ஒருமுறை – ரூ.55
இருபுறம் – ரூ.80
இலகுரக வர்த்தக வாகனங்கள்
ஒருமுறை – ரூ.90
இருபுறம் – ரூ.130
பஸ்கள், டிரக்
ஒருமுறை – ரூ.185
இருபுறம் – ரூ.275
வர்த்தக வாகனங்கள்
ஒருமுறை – ரூ.200
இருபுறம் – ரூ.300
கனரக கட்டுமான எந்திர வாகனங்கள்
ஒருமுறை – ரூ.290
இருபுறம் – ரூ.435
பெரிய வாகனங்கள்
ஒருமுறை – ரூ.350
இருபுறம் – ரூ.525
சூரப்பட்டு சுங்கச்சாவடி – புதிய கட்டணங்கள்
கார், ஜீப், வேன், இலகுரக மோட்டார் வாகனங்கள்
ஒருமுறை – ரூ.75
இருபுறம் – ரூ.115
இலகுரக வர்த்தக வாகனங்கள்
ஒருமுறை – ரூ.120
இருபுறம் – ரூ.185
பஸ்கள், டிரக்
ஒருமுறை – ரூ.255
இருபுறம் – ரூ.385
வர்த்தக வாகனங்கள்
ஒருமுறை – ரூ.280
இருபுறம் – ரூ.420
கனரக கட்டுமான எந்திர வாகனங்கள்
ஒருமுறை – ரூ.400
இருபுறம் – ரூ.600
பெரிய வாகனங்கள்
ஒருமுறை – ரூ.490
இருபுறம் – ரூ.730
உள்ளூர் வாகனங்களுக்கு மாதாந்திர கட்டணம்
சுங்கச்சாவடியிலிருந்து 20 கி.மீ. தொலைவுக்குள் உள்ள வணிகம் சாராத வாகனங்களுக்கு மாதந்தோறும் ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படும்.