Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தியுடன் ஜோதி மல்ஹோத்ரா இருக்கும் புகைப்படம்.. உண்மையா? போலியா?

Siva
செவ்வாய், 27 மே 2025 (09:01 IST)
சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் ஒரு பதிவில் பாகிஸ்தானுக்காக உளவு சொன்னதாக கூறப்படும் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை ராகுல் காந்தி சந்தித்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
X எனும் சமூக ஊடகத்தில் ஒருவர், ராகுல் காந்தியும் ஜோதியும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, “இது ராகுல் காந்தி மற்றும் காங்கிரசின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மீதான நெருக்கடிகளை காட்டுகிறது” என குறிபிட்டுள்ளார்.
 
மற்றொருவர், “பப்புவின் புகைப்படம் எப்போதும்  துரோக குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்களுடன் ஏன் பொருந்துகிறது?” என்று கேள்வி எழுப்பி, அந்தப் புகைப்படத்தில் உள்ளவர் ஜோதி மல்ஹோத்ரா என கூறியிருந்தார்.
 
ஆனால் வைரலாகும் இந்த புகைப்படத்தை  ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்ததில், அது மே 7, 2018ல் வெளியான இந்தியா டுடே செய்தியில் வந்த புகைப்படம் என்பது தெரிய வந்துள்ளது. உண்மையில், அந்த படத்தில் ராகுல் காந்தியுடன் இருந்தவர் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ அதிதி சிங் ஆவார். அவருடைய முகம் ஏஐ மூலம் மாற்றப்பட்டு ஜோதி மல்ஹோத்ராவாக காட்டப்பட்டுள்ளது.
 
அதேபோல் இன்னொரு புகைப்படம் 2022 செப்டம்பர் 18ல் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை காலத்தில் எடுக்கப்பட்டதாகவும், அதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு பெண் இருப்பதாகவும் தெரியவந்தது. மொத்தத்தில் ராகுல் காந்தியுடன் ஜோதி இருப்பதாக 2 புகைப்படங்களும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments