உத்தர பிரதேசத்தில் மனைவியை கணவனே பணம் வாங்கி கொண்டு நண்பர்களை விட்டு வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்தவர் 35 வயது பெண் ஒருவர். இவருக்கு கடந்த 2010ம் ஆண்டில் ஒருவருடன் திருமணமாகி 2 மகன்கள், 2 மகள்கள் என நான்கு குழந்தைகள் உள்ளனர். தற்போது பெண்ணின் கணவர் சவுதியில் ஆட்டோமொபைல் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மனைவி, குழந்தைகளை பார்க்க வந்து செல்கிறார்.
கடந்த சில ஆண்டுகள் முன்னதாக அப்படியாக வந்த பெண்ணின் கணவர், தன்னுடன் தனது 2 நண்பர்களை அழைத்து வந்துள்ளார். அன்று பெண்ணின் கணவன் கண் முன்னாலேயே பெண்ணை அந்த இரு நண்பர்களும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதை வெளியில் சொன்னால் உன்னை விவாகரத்து செய்து விடுவேன் என கணவன் மிரட்டியுள்ளார். குழந்தைகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெண்ணும் எதையும் வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார்.
ஆனால் அதன் பின்னர் அந்த பெண் வீட்டிற்கு அருகிலேயே வீடு எடுத்து தங்கிய அந்த கணவரின் நண்பர்கள், அடிக்கடி வந்து இந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதை சவுதி சென்ற தனது கணவரிடம் சொன்னபோது அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அமைதியாக இருக்கும்படி கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அவர்கள் அந்த பெண்ணை வன்கொடுமை செய்து அதை வீடியோவாக எடுத்து சவுதியில் உள்ள அவரது கணவருக்கே அனுப்பி வைத்துள்ளனர். அவரும் அந்த வீடியோக்களை கண்டு ரசித்துள்ளார். கடந்த 3 ஆண்டு காலமாக இந்த கொடுமைகளை பொறுத்துக் கொண்டிருந்த அந்த பெண் இறுதியாக மன உறுதியோடு காவல் நிலையம் சென்று தனது கணவர் மற்றும் அவரது நண்பர்கள் தன்னை சீரழித்தது குறித்து தைரியமாக புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர்கள் தொடர்ந்து வன்கொடுமை செய்ததில் தற்போது அந்த பெண் 1 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரித்து தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை எஸ்.எஸ்.பி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K