Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் ஐசிஐசிஐ வங்கி சிஇஓ சந்தா கோச்சார் குற்றவாளி தான்; தீர்ப்பாயம் அதிரடி அறிவிப்பு..!

Mahendran
செவ்வாய், 22 ஜூலை 2025 (13:24 IST)
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் குற்றவாளிதான் என்று தீர்ப்பாயம் உறுதி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த 2012 ஆம் ஆண்டு வீடியோகான் குழுமத்திற்கு கடன் வழங்கியதில் சந்தா கோச்சார் ரூ.64 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை, தற்போது தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது.
 
மேலும், சந்தா கோச்சாருக்கு சொந்தமான ரூ.78 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ய எடுத்த முடிவு சரியானதுதான் என்றும் தீர்ப்பாயம் கூறியுள்ளது. 
 
கடந்த 2020 ஆம் ஆண்டு சந்தா கோச்சாரின் ரூ.78 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. முடக்கப்பட்ட இந்த சொத்துக்களை விடுவிக்க கோரி சந்தா கோச்சார் தீர்ப்பாயத்தில் முறையிட்ட நிலையில், சொத்துக்களை விடுவிக்க ஆரம்பத்தில் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. 
 
ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த தீர்ப்பாயம், சொத்துக்களை விடுவிக்க உத்தரவிட்ட அதிகாரிகளை கண்டனம் தெரிவித்ததுடன், அமலாக்கத்துறையின் நடவடிக்கையை உறுதி செய்தது.
 
லஞ்சம் பெற்றது உறுதியானதால், சந்தா கோச்சார் குற்றவாளிதான் என்றும் தீர்ப்பாயம் தற்போது திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பு, வங்கி துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலியான பாலியல் பலாத்காரம் புகார்.. பெண் ஐடி ஊழியர் கைது..!

10 ஆண்டுகளுக்கு முன் தாய் அவமதிப்பு.. காத்திருந்து பழிவாங்கிய மகன்.. சினிமா போல் ஒரு சம்பவம்..!

துணை ஜனாதிபதி ராஜினாமா விவகாரம்: இரு அவைகளும் அமளியால் ஒத்திவைப்பு..!

சென்னை விமான நிலையத்தில் முன் பதிவு டாக்சிகளுக்கு ஆன்லைன் வசதி: பயணிகளுக்கு பெரும் நிம்மதி!

ஒரே நாளில் உச்சம் சென்ற தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.74000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments