அண்ணா பல்கலைகழக பொறியியல் மாணவர்களுக்கு தத்துவயியல் படிப்பில் பகவத் கீதை பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அகில இந்திய தொழில்நுட்ப கல்விகுழும அறிவுறுத்தலின் படி, அண்ணா பல்கலைகழகத்தில் பயிலும் பொறியியல் மாணவர்களுக்கு தத்துவயியல் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் பகவீத் கீதை பாடம் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் MIT, CEG, ACT, SAP, வளாகத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்தாண்டு முதல் தத்துவயியல் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாவும் கூறப்படுகிறது. பொறியியல் மாணவர்களின் மூன்றாவது செமஸ்டரில் தத்துவயியல் பாடம் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.
ஹிந்து மதத்தின் புராண கதையான பகவத் கீதையை பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக அறிமுகப்படுத்துவது, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.