Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில!

Advertiesment
கீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில!
எவனொருவன் அகங்காரம், செருக்கு, தற்பெருமை, காமம், கோபம் மற்றும் பொருள்சார் ஆசைகளிலிருந்து விடுபட்டு, நிலையற்ற பொருட்கள்மீது உரிமை கொண்டாடாது, அமைதி அடைகிறானோ, அவனே பிரம்மமாகத் தகுவான்.

மனிதன் தன் நினைவுகளால் ஆனவன்; அவன் எதுவாக நினைக்கிறானோ அதுவாகவே ஆகிறான்
 
* உனக்கு வேண்டியதை அடைய நீ போராடாதபோது, அதனை இழந்ததற்கு நீ அழ கூடாது!
 
* மானிடன் ஒருவன் தான், அவனது நண்பன்; பகைவனும் கூட.
 
* மரத்துண்டினைத் தீயின் வெப்பம் சாம்பல் ஆக்குவது போல, எல்லா கர்மங்களும் ஞானத்தின் பாற்பட்டு கருகும்!
 
* சந்தேகப்படும் ஒருவனுக்கு இந்த உலகத்திலும் சரி, வேறு எந்த உலகித்திலும், சந்தோஷம் என்பது சேகரித்து வைக்கப்படவில்லை.
 
* முட்டாள், அறிவும் ஆக்கமும் வெவ்வெறு என்று கருதுகின்றான்; சால்புடையவன் அவை ஒன்றென கருதுகிறான்!
 
* ஆசைகளைக் குறைத்து கொள்வதே மகிழ்ச்சியின் திறவுகோல்!
 
* நரகத்திற்கு மூன்று வாசற்படிகள் உள்ளன - பேரவா, க்ரோதம், காமம்!
 
* அழிப்பவரில் சிறந்தவன் என்று நான் எண்ணுவது, காலனையே! காலம் எல்லாவற்றையும் அழித்துவிடுகிறது!

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டு தலைவாசலில் இதை செய்யவே கூடாது; அது என்ன தெரியுமா..?