Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் நீக்கம்: முதல் கட்சியே சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம்'

Siva
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2025 (08:19 IST)
கடந்த 2019ஆம் ஆண்டு முதல், ஆறு ஆண்டுகளாக எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடாத அரசியல் கட்சிகளின் பதிவை நீக்கம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, இந்தியத் தேர்தல் ஆணையம் அத்தகைய கட்சிகளுக்கு விளக்க அறிவிப்பாணைகளை வெளியிட்டுள்ளது.
 
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவின் ஒரு பகுதியாக, திருப்பூரில் செயல்பட்டு வரும் 'சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம்' என்ற கட்சியின் பதிவு ரத்து செய்யப்பட உள்ளது. கடந்த 2019 முதல் இந்த கட்சி எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
 
இதையடுத்து, தங்கள் தரப்பு விளக்கத்தை நேரில் அளிப்பதற்காக, ஆகஸ்ட் 26ஆம் தேதி அல்லது அதற்கு முன் சென்னை தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் ஆஜராகுமாறு அந்தக் கட்சியின் தலைமைப் பொறுப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணை முடிந்த பிறகு, இந்தியத் தேர்தல் ஆணையம் தனது இறுதி உத்தரவைப் பிறப்பிக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 
தேர்தல் ஆணையத்தில் அதிக எண்ணிக்கையிலான கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவை தேர்தல் செயல்பாடுகளில் பங்கேற்பதில்லை என்பது கவனிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறை அல்ல என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது. இதன் காரணமாக, நீண்ட காலமாக தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி.. அடித்து சொன்ன விஜய்..!

பாசிச பாஜகவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை: தவெக தலைவர் விஜய் உறுதி..!

பிரதமர் மோடிக்கு 2 கோரிக்கைகளை வைக்கிறேன்.. செய்வீர்களா? ஜெயலலிதா பாணியில் விஜய் கேள்வி..!

திமுக, அதிமுக கொள்கையில் திசைமாறிவிட்டன! விஜய்யால் மட்டும்தான் இனி விடிவுக்காலம்?! - ஆதவ் அர்ஜூனா!

ராஜா நீங்கதான்.. உங்க தளபதி யாரு? - விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

அடுத்த கட்டுரையில்
Show comments