Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 26 March 2025
webdunia

கொரோனா வைரஸ் தடுப்புக்கு ஊமத்தை மருந்து குடித்த 8 பேர் கவலைக்கிடம் !

Advertiesment
கொரோனா வைரஸ் தடுப்புக்கு  ஊமத்தை  மருந்து குடித்த 8 பேர் கவலைக்கிடம் !
, செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (17:56 IST)
சீனாவில் இருந்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா தொற்றுக்கு இந்தியாவில் 4 ஆயிரத்துக்கும் அதிகமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், சுமார் 336 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், கிராமங்களிலும் நகரங்களிலும் சிலர் வாட்ஸ் ஆப் பக்கத்தில் கொரோனா தடுப்பு மருந்து என வரும் பொய்யான தகவல்கள், வதந்திகள் பலவித அபாயத்தை ஏற்படுத்துகின்றன. இதைத்தடுக்க மத்திய அரசு பலவித நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில்  கொரோனா வைரஸ் தடுப்புக்கு ஊமத்தை பூவை பயன்படுத்தி மருந்தை  தயாரித்துள்ளனர்.

இந்த ஊமத்தை  மருந்து குடித்த 8 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. மேலும் உரிய மருந்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சித்தூர் காவல் துறை அறிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தடுப்புக்கு  ஊமத்தை  மருந்து குடித்த 8 பேர் கவலைக்கிடமாக உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீக்ரெட்... விலை சொல்லாமல் அறிமுகமான விவோ V19!!