Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகாலயா தேனிலவு கொலையை பார்த்து கணவரை கொலை செய்த பெண்.. கள்ளக்காதலர் தலைமறைவு..!

Mahendran
வியாழன், 3 ஜூலை 2025 (15:18 IST)
மேகாலயாவில் தனது கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதேபோன்ற ஒரு கொடூரமான சம்பவம் பீகாரிலும் நடந்துள்ளது. மேகாலயா சம்பவத்தால் ஈர்க்கப்பட்ட பீகார் பெண் ஒருவர், தனது கணவரை கூலிப்படையால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அந்தப் பெண், தனது மாமாவுடன் கள்ள உறவில் இருந்த நிலையில், அவருடன் நிரந்தரமாக வாழ தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் கூலிப்படையை அமர்த்தி, கணவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.
 
குடும்பத்தினரின் கட்டாயத்தின் பெயரில்தான் அவர் பிரியன் ஷூ என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால் அவருக்குத் தனது மாமா மீதுதான் காதல் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமணத்திற்குப்பின் தனது கணவருடன் வாழ விரும்பாத அவர், கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ததாகவும், இதை அவர் போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
 
ஆனால், அவரது மாமாவும் கள்ளக்காதலருமான ஜீவன் சிங் என்பவர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், அவரை கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதிக்கு கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட்: துரைமுருகன் புகழாரம்

குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கியால் சுட தயங்க வேண்டாம்: ஏடிஜிபி அதிரடி உத்தரவு..!

கும்பகோணத்தில் விநாயகர் கோவிலை இடிக்க முயற்சி.. அதிகாரிகளை தடுத்து பொதுமக்கள் போராட்டம்..!

இனி ரத்த தானம் தேவையில்லையா? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த செயற்கை ரத்தம்..!

திட்டிய முதலாளி மனைவி.. ஆள் இல்லாத நேரத்தில் தீர்த்துக் கட்டிய டிரைவர்! - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments