Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லி உள்பட வடமாநிலங்களில் நில அதிர்வு: அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய பொதுமக்கள்..!

Advertiesment
டெல்லி உள்பட வடமாநிலங்களில் நில அதிர்வு: அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய பொதுமக்கள்..!
, புதன், 22 மார்ச் 2023 (07:41 IST)
டெல்லி உள்பட வட மாநிலங்களில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் அடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடிவந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம் பஞ்சாப் மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து பொதுமக்கள் வீடுகளை விட்டு அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர் 
 
நேற்று இரவு ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் இருந்த இந்த நிலநடுக்கம் காரணமாகத்தான் வட மாநிலங்களில் நில அதிர்வு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான், சீனா, துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக செய்திகள். இந்த நிலநடுக்கம் குறித்த சேத விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

68.26 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!