Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’e-Rupi' மின்னணு பரிவர்த்தனை: பிரதமர் மோடி அறிமுகம் செய்கிறார்!

Advertiesment
’e-Rupi' மின்னணு பரிவர்த்தனை: பிரதமர் மோடி அறிமுகம் செய்கிறார்!
, திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (09:32 IST)
’e-Rupi' மின்னணு பரிவர்த்தனை: பிரதமர் மோடி அறிமுகம் செய்கிறார்!
பிரதமர் மோடி இன்று ’e-Rupi'என்னும் புதிய மின்னணு பணப் பரிவர்த்தனை நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து வருகிறார்
 
மின்னணு மூலமாக மக்கள் நலத்திட்டங்களின் பயன்கள் எந்த இடையூறும் இல்லாமல் நேரடியாக மக்களுக்கு சென்று சேரும் வகையில் இந்த ’e-Rupi' செயலியை அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
க்யூஆர் கோட் அல்லது எஸ்எம்எஸ் மூலம் பயனாளிகளின் செல்போன்களுக்கு பணம் அனுப்பப்படும் என்றும் அரசின் திட்டங்களில் இருந்து பொதுமக்களுக்கு கிடைக்கும் பணம் இந்த ’e-Rupi' எனப்படும் மின்னணு பரிவர்த்தனை மூலம் பரிவர்த்தனை செய்யப்படும் என்றும் இந்த திட்டத்தை இன்று பிரதமர் மோடி அறிமுகப்படுத்துகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த மின்னணு பரிவர்த்தனைக்கு இன்டர்நெட் தேவையில்லை என்பதும் இன்டர்நெட் இல்லாமலேயே இது செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது     
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரேஷனில் அரிசி, சமையல் எண்ணெய் இலவசமாம்...!!