Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறுவனை கடித்து குதறிய நாய்கள்:நெஞ்சை பதறவைத்த சிசிடிவி கேமரா காட்சிகள்

Advertiesment
சிறுவனை கடித்து குதறிய நாய்கள்:நெஞ்சை பதறவைத்த சிசிடிவி கேமரா காட்சிகள்
, வெள்ளி, 21 ஜூன் 2019 (18:31 IST)
உத்திரப் பிரதேசத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

உத்திரப் பிரதேச மாநிலம் மதுராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன், அவனின் வீடு அமைந்திருக்கும் தெருவில் விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது அங்கு கூட்டமாக வந்த தெரு நாய்கள், எதிர்பாராத விதமாக அந்த சிறுவனை கடித்து குதறியது. அதன் பிறகு சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு சிறுவனின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் வந்து நாய்களை விரட்டினர்.

பின்பு சிறுவனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.தற்போது சிறுவன் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த தெரு மக்கள், தங்களது பகுதியில் நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாக மாவட்ட ஆட்சி தலைவரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து தெரு நாய்களை கட்டுபடுத்துமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்:வெளியுறவுத்துறை அறிவிப்பு