Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எச்சரிக்கை! ஹெல்மெட் போடாம டூவீலர் ஓட்டுனா ...வீட்டுக்கே வரும் சம்மன்

எச்சரிக்கை! ஹெல்மெட் போடாம டூவீலர் ஓட்டுனா ...வீட்டுக்கே வரும் சம்மன்
, வியாழன், 13 ஜூன் 2019 (17:19 IST)
இருசக்கரம் வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அவ்வப்போது மாநில அரசுக்கு அறிவுறுத்திக்கொண்டே உள்ளது.இந்நிலையில் தற்போது சென்னையில் கண்காணிப்புக் கேமராக்களை போலீஸார் பொருத்தியுள்ளனர். இதில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் மக்களின் வீட்டுக்கே சம்மன் அனுப்பும் திட்டத்தையும் துவங்கியுள்ளனர்.
சென்னையில் குற்றங்களைக் குறைக்கவும், விதி மீறல்களில் ஈடுபடுவோரை தடுக்கவும், இதுவரை 2.5 லட்சம் வீடியோக்களை போலீஸார் பொருத்தியுள்ளனர். இதன் மூலம் குற்றச் சம்பவத்தில் ஈடுபடுவோரை இனம் காணமுடியும்.
 
இந்நிலையில் தற்போது போலீஸார் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது கவனத்தை திருப்பி உள்ளனர். அதில் குறிப்பாக ஒரு வாகனத்தில் இருவர், மூன்று பேர் வரை செல்லுகின்றனர். இருவர் செல்லும் போது ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர். இதனைக் குறைக்கும் பொருட்டு போலீஸார் தற்போது நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
 
மேலும்,  மேற்கூறியவற்றில் விதிமீறலில் ஈடுபட்ட நபர்கள் நாட்டில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்குச் சென்றுவிடும்.
 
அதன்படி  ஒருவர் எத்தனை முறை வாகன விதிமீறலில் ஈடுபட்டுள்ளார் என்பதைக் கண்டறிய ம்னுடியும் என்றும் இதுவரை 90 ஆயிரம் பேர் விதிமீறலில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் கண்டறிந்துள்ளதாகவும் , அவர்களிடம் அபராதம் வசூல் செய்யப்படும்  என போலீஸார் தெரிவிதுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட்ஜெட் விலையில் டிரிபிள் கேமரா: கலக்கும் எல்ஜி X6!